தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Tamil Nadu Veterinary and animal Sciences university ) கிரிஷி விக்யான் கேந்ரா (Krishi Vigyan Kendra) கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாக்பூரில் உள்ள ICAR-CICR நிதியளிக்கும்  திட்டத்தில் உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணி விவரம்: 


 Young Professional I 


Young Professional II


பணியிடம் : 


இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்படுவர். 


கல்வித் தகுதி: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேளாண் இளங்கலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். 


Young Professional II பணிக்கு விண்ணப்பிக்க வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Agronomy / Agricultural Entomology /  Plant Pathology துறை படித்திருந்தாலும் நல்லது. 


பருத்திப் பயிர் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.


கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 


இந்தப்  பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 


Young Professional I - ரூ.25,000/-


Young Professional II - ரூ.35,000/-


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்படுவர். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 


‘APPLICATION FOR THE POST OF YOUNG PROFESSTIONAL- I or YOUNG PROFESSTIONAL- II’. என்று அஞ்சல் உறையில் குறிப்பிட வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Professor and Head
Krishi Vigyan Kendra
Veterinary College and Research Institute Campus,
Namakkal – 637 002.


இ.மெயில் : hodabtmvc@tanuvas.org.in


இணையதள முகவரி : www.tanuvas.ac.in


விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.10.2023


அறிவிப்பின் முழு விவரத்திற்கு  https://drive.google.com/file/d/1a89F1ELS7IQ0D2qwEeMqq6G7W64o4-sk/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.