அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


 Project Associate


பணியிடம்:


பயோடெக்னாலஜி துறை, அண்ணா பல்கலைக்கழகம்


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஊக்கத் தொகை


இதற்கு மாத ஊதியமாக ரூ.31,000 / ரூ.25,000 வழங்கப்படும். 


பணி காலம்


ஜூலை,2023 - ஜூலை 2024


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 18.10.2023  -ன் படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை?


நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 


எப்படி விண்ணப்பிக்கலாம்?


விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Director, 
CEAT, Department of Automobile Engineering,
Madras Institute of Technology, Anna University, Chromepet, Chennai – 600 044 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/JRF_RECRUITMENT_Bio_Technology.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.10. 2023


****


தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி குறித்த விவரங்களை காணலாம்.


பணி விவரம்:


இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)


வயது வரம்பு:


இதற்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


பணி காலம்:


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். 


ஊதிய விவரம்:


அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


கவனிக்க..


இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.


முகவரி:


The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20Specialist%20notification209202310361.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.11.2023