திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு இந்து மதத்தினைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


ஓட்டுநர்


தபேதர்


உதவி மின் பணியாளர்


வேதபாராயணம்


காவலர்


உதவி சுயம்பாகம்


உதவி பரிச்சாரகம்


சமையலர்


சமையல் உதவியாளர் 


தூய்மை பணியாளர்


கல்வித் தகுதி:


ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் இருப்பது அவசியம்.


தபோதார் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


உதவி மின் பணியாளர் எலக்ட்ரிகல் வொயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பு முடித்திருக்க வேண்டும்.


காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


உதவி சுயம்பாகம் பணிக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.


உதவி பரிச்சாரகம் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


வேதபாராயணம் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


உதவி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 


தூய்மை பணியாளர் பணிக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



ஓட்டுநர் -ரூ.18,500 முதல் 58,600  வரை


தபேதார் - ரூ.15,900 முதல் 50,400 வரை 


உதவி மின் பணியாளர் -ரூ.16,600 முதல் 52,400 வரை 


வேதபாராயணம் - ரூ.15,700 முதல் 50,000 வரை


காவலர்- ரூ.15,900 முதல் 50,400 வரை 


உதவி சுயம்பாகம் -ரூ.10,000 முதல் 31,500 வரை


உதவி பரிச்சாரகம் -ரூ.10,000 முதல் 31500 வரை 


சமையலர் - ரூ.10,000 முதல் 31,500 வரை 


சமையல் உதவியாளர் - ரூ.6,900 முதல் 21,500 வரை .


துப்புரவாளர் - ரூ.4,200 முதல் 12,900 வரை 


வயது வரம்பு :


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


விருப்பம் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/என்ற இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கான அறிவிப்பு விவரம் அனுப்பப்படும்.


விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://hrce.tn.gov.in/resources/docs


அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவைகள்:


இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பத்துடன் கல்வித் த்குதி சான்றிதழ் நகல் உடன் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணலுக்கு அசல் சான்றிதழ் உடன் வர வேண்டும்.


விண்ணப்பட்தாரர்கள் உடல் தகுதி சான்றுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 


அஞ்சல் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


உதவி ஆணையர் /செயல் அலுவலர்.


அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில்,


திருவொற்றியூர், சென்னை - 1



விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. ( குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)


https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/81/704/document_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பணியிடங்களின் எண்ணிக்கை போன்ற கூடுதல் விவரங்களை காணலாம்.