தூத்துக்குடி கயத்தார் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கயத்தாறு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


அலுவலக உதவியாளர் 


கல்வித் தகுதி:


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 


மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


 அலுவலக உதவியாளர்: ரூ.15,700/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். (15,700-50,000)


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்: 303, நிதி(ஊதியக்குழு) துறை நாள்: 11.10.2017, அரசாணை எண்: 305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்: 306, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017-இன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:


1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.


2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.


4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.


5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 


அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:


ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்.
கயத்தார் - 628 704


தூத்துக்குடி


தொலைபேசி எண் - 04639 -266207


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி:  07/04/2023 மாலை 05.45 வரை 


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- - https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023030731.pdf -என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


ஆல் தி பெஸ்ட்..




மேலும் வாசிக்க..


Job Alert : வேலை வேண்டுமா? 8-ஆம் வகுப்பு தேர்ச்சி; பணி குறித்த கூடுதல் விவரங்கள் இங்கே..


Amit Shah : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொந்தளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!