வேளாண் விஞ்ஞானிகளுக்கான பல்வேறு பணியிடங்களை வேளாண் ஆராய்ச்சி ஆட்சேர்ப்பு வாரியம் (The Agricultural Scientists Recruitment Board (ASRB)) வெளியிட்டுள்ளது. Subject Matter Specialist (SMS) (T-6) and Senior Technical Officer (STO) உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணி விவரம்:


Subject Matter Specialist(SMS) (T-6) -163


Senior Technical Officer (STO) -32


மொத்த பணியிடங்கள் - 195 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


பணியிடம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவர்களாவும், 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது?


இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


இதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தப்படும்.  


எப்படி விண்ணப்பிப்பது?


இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.



  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://asrb.org.in/ -க்குச் சென்று அறிவிப்பு குறித்த விவரங்களை காணவும்

  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

  • ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

  • பூர்த்தியடைந்த விண்ணப்பத்தினை ‘சப்மிட்’ கொடுக்கவும்.


விண்ணப்ப கட்டணம்:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 




ஆன்லைன் தேர்வு நடைபெறும் மையங்கள்:




தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை https://www.asrb.org.in/9-syllabus/27-syllabus
என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


தேசிய எழுத்துத் தேர்வு தகுதிகள் உள்ளிட்ட அப்டேட்கள் குறித்த விவரத்தை அறிய, அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.asrb.org.in/ - என்ற பக்கத்தில் வெளிவரும் தகவல்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறுவதற்கு தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண் விவரம்:




விண்ணப்பிக்க கடைசி தேதி- 10.04.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.asrb.org.in/images/Combined-Notification-for-NET-2023,-SMS-(T-6)-and-STO-(T-6)-Examination-2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் படிக்க..


Amit Shah : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொந்தளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!


Actor Soori: 'குரூப் டான்சர் டூ கதாநாயகன்' சூரிக்கு திருப்புமுனை தருமா வெற்றிமாறனின் விடுதலை?