தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய நீர்மின்நிலையத்தில் Senior medical officer, assistant Rajbhasha officer, Juinor Engineer (civil) junior engineer (Electrical) junor engineer machanoical மற்றும் Sr. accountant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதிகள் உள்ள நிலையில் அவை என்பது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்ஃ
Senior medical officer பணிக்கான தகுதிகள்:
தேசிய நீர்மின் நிலையத்தில் Senior medical officer ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு பொறியியல் பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களுக்கான இந்த அறிவிப்பில் , தேர்ந்தெடுக்கபபடும் தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ1 லட்சத்தும் 80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
assistant Rajbhasha officer கான தகுதிகள்:
assistant Rajbhasha officer ஆவதற்கு விண்ணப்பத்தார்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 7 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Juinor Engineer (civil) பணிக்கான தகுதிகள்: சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது 68 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம்.
junior engineer ஆக Electrical பிரிவில் 34 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EEE முடித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதேப்போன்று junor engineer mechanical பிரிவில் 31 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கான சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம்.
Sr. accountant ஆவதற்கான தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தற்போது 20 காலிப்பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nhpcindia.com என்ற இணையத்தின் மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் சான்றிதழ்களின் சரிப்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்....