சென்னை கணித நிறுவனத்தில் (The Institute of Mathematical Sciences) காலியாக உள்ள Deputy Controller Of Accounts பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


Deputy Controller Of Accounts 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


நிதி மேலாண்மை, திட்டமிடுவது, நிர்வாக திட்டமிடல், நிதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.


குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.  எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.


இந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


ஊதிய விவரம்


7-வது மெட்ரிக்ஸ் லெவல் -11-ன் படி மாத ஊதியம் வழங்கப்படும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தெரிவு செய்யும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்ப கட்டணமாக 500-ரூபாய் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.imsc.res.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணைதள முகவரியின் வேலைவாய்ப்பு பக்கத்தில் ‘Recruitment of Deputy Controller of Accounts' என்றிருக்கும். அதை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


https://naukri.imsc.res.in/dca/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணபிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2023 


இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.imsc.res.in/~office/jobs/imsc-dca-14nov2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


BHEL Recruitment 2023 : 


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வாசிக்க..


அரசு வேலை


திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. மேலும் வாசிக்க..


டி.என்.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு


தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள் / நிறுவனங்களில் அடங்கிய ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர்,8-ம் தேதி கடைசி தேதி.


பணி விவரம்



  • கணக்கு அலுவலர் நிலை - III

  • கணக்கு அலுவலர்

  • மேலாளர் நிலை III

  • முதுநிலை அலுவலார் (நிதி)

  • மேலாளர் (நிதி)


மொத்த பணியிடங்கள் - 52




 



கல்வித் தகுதி



  • கணக்கு அலுவலர் நிலை - III பணிக்கு விண்ணப்பிக்க Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA) படிப்பில் தேர்த்தி பெற்றிருக்க வேண்டும்.

  • கணக்கு அலுவலர் பணிக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் நிலை மூன்று, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் முதல்நிலை அலுவலர் (நிதி) ஆகிய பணிகளுக்கு C.A., ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பதியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் மேலாளர் நிதி பணிக்கு C.A inter / ICWA(CMA) inter தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10+2 தேர்ச்சி பெற்ற பின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2023


அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/english/25_2023-%20Eng.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.