தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த்து. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களை அறிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள்
சென்னை - 86
பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்
உருது மொழிப்பாடம் - 6
கன்னட மொழி - 4
பட்டதாரி ஆசிரியர் -42
பட்டதாரி ஆசிரியர் (IEDSS) -144
பட்டதாரி ஆசிரியர் - தொடக்கப் பள்ளி - 78
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். ((Special Education)) படிப்பை முடித்திருக்க வேண்டும். 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஊதிய விவரம்
இந்தப் பணிகளுக்கு ரூ.36,400 ரூபாய் முதல் 11,5700 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
வயது வரம்பு
பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
கட்டாய தமிழ் மொழித் தேர்வு
தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு
150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
முழுமையான விவரங்களைப் பெற https://www.trb.tn.gov.in/admin/pdf/7019541921Addendum%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு -https://www.trb.tn.gov.in/
வங்கி வேலை வேண்டுமா?
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்- Junior Associate (Customer Support & Sales) அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜூனியர் அசோசியேட் ( Junior Associate ) நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் க்ளர்ரிக்கல் க்ரேட் நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அந்தந்த உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் வாசிக்க..
இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. அதையொட்டி, கடலூரில் அடுத்தாண்டு (2024) ம் ஆண்டு ஜனவரி,4 முதல் 13-ம் தேதி வரை இராணுவ வேலைவாய்ப்பு உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. மேலும் வாசிக்க.
பெல் நிறுவனத்தில் வேலை
BHEL Recruitment 2023 : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் ' Supervisor Trainee' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.மேலும் வாசிக்க...
மேலும் வாசிக்க..