Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


பங்குச்சந்தை நிலவரம்:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 105.88 அல்லது 0.16 % புள்ளிகள் உயர்ந்து 66,036.57 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 31.00%  அல்லது 0.17% உயர்ந்து 19,815.55 ஆக வர்த்தகமாகியது. 


கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிவுடன் இருந்த நிலையில், நேற்றும் இன்றும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 275.62 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் சில பங்குகளில் மதிப்பு சற்று குறைந்தும் தங்கத்தின் விலை இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தும் இருந்தது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


பி.பி.சி.எல்., சிப்ளா, ஹீரோ மோட்டர்கார்ப்,டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், பவர்கிரிட் கார்ப், சன் ஃபார்மா, டெக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனிஅப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, ஹெட்.சி.எல். டெக், என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், லார்சன், டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஃபின்சர்வ், டி.சி.எஸ்., நெஸ்லே, ஐ.டி.சி., ,மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, க்ரேசியம். கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


ஏற்றத்துடன் வர்த்தகமாகிவந்த பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது.  சென்செக்ஸ் 165.73 புள்ளிகள் அல்லது 0.25% சரிந்து 65,765.04 ஆகவும் நிஃப்டி 45.6 புள்ளிகள் சரிந்து 19,737.80 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. 1899 பங்குகள் சரிவுடனும் 99 பங்குகளின் மதிப்புகள் மாற்றமின்றியும் 1228 பங்குகள் மதிப்பு அதிகரித்தும் வர்த்தகமாகின.