மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.


பணி விவரம்



  •  பயோ டெக்னாலஜி - 50 

  • பயோ கெமிஸ்ட்ரி - 20 

  • உணவு தொழில்நுட்பம் - 15 

  • வேதியியல் - 56 

  • பாலிமர் சயின்ஸ் - 9 

  • பயோ மெடிக்கல் - 53 

  • எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 108 

  • எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 29 

  • கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி - 69 1

  • இயற்பியல் - 30

  • சிவில்- 9 

  • மெக்கானிக்கல் - 99 

  • உலோகவியல் - 4 

  • டெக்ஸ்டைல் - 8


கல்வித் தகுதி:


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


4.8.2023 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


www.qcin.org- என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு பொதுப்பிரிவினர் ரூ.1000 செய்ய வேண்டும். பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர்,  பெண்கள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.


 விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://qcin.org/wp-content/uploads/2023/07/Recruitment-Notification_Final-_-30062023-1.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.