தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


காவலர் 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


GT-GL- Priority கொரோனா தொற்றினாலோ, இதர காரணத்தினாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 32 , பட்டியலின / பழங்குடியின பிரிவினருக்கு 37 அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


குரூப் - டி லெவல் -1 படி ரூ.15,700 - ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கொரோனா தொற்றினாலோ இதர காரணத்தினாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் என்பதற்கான சான்று ஆகியவற்றை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு 


எபனேசர் டைல்ஸ் ஷோரூம் பின்புறம்


வார்டு, எண்-5, கதவு எண் 168/23/24 முகமதியா நகர்,


குத்துக்கல்வலசை அஞ்சல்


தென்காசி -627803


விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.09.2023 மாலை 5.45 மணி வரை


இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://drive.google.com/file/d/1aEnQxZ9csVCVQDfAFkzpEg9C_K2hsCPR/view-என்ற இணைப்பில் காணலாம். 


******


தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலிய உள்ள பணியிடத்திற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணியிட விவரம்


e-District Manager 


கல்வித் தகுதி:



  • இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • SSLC/ HSC/ UG/ PG என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

  • இதற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியர்களாகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


பணியிட விவரம்



  • நாமக்கல்

  • நாகப்பட்டினம்

  • பெரம்பலூர்

  • திருச்சிராப்பள்ளி

  • திருப்பூர்

  • வேலூர்

  • விழுப்புரம்

  • காஞ்சிபுரம்


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு கம்யூட்டர் தேர்வு நடத்தப்படும். 90 நிமிடங்கள் நடைபெறும் தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். நெகட்டிவ் மார்க் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாடத்திட்டம் 


ஆங்கிலம். கம்யூட்டர், C, C++., JAVA, நெட்வோர்க்கிங், இண்டர்நெட் டெக்னாலஜிஸ், ஹார்ட்வேர், டேட்டாபேஸ் மேனேஸ்மெண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


இந்தத் தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாள் - 24.09.2023


விண்ணப்பிப்பது எப்படி?


https://tnega.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.09.2023 -  6 மணி வரை


விண்ணப்பிக்க https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


https://tnega-edm.onlineregistrationform.org/TEG/instructions2.jsp  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.