கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் Centre for University and Industry Collaboration (CUIC) இணைந்து Tata Electronics Private Limited-ல்  இளங்கலை Manufacturing Science துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணிவிவரம்


தமிழ் 


ஆங்கிலம்


கணிதம்


கல்வித் தகுதி:


தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் NET /SLET   தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு bucuic2020@buc.edu.in- என்ற இ-மெயில் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும். அதோடு, நேர்காணல் நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


BU-CUIC Hall


Bharathiar University,


Coimbatore 641046


தொடர்புக்கு- +91-95971 74445


விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.09.2023


நேர்காணல் நடைபேறும் தேதி - 19.09.2023


கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.


 



*******


தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




பணி விவரம்:


 ஆய்வக உதவியாளர் (LABORATORY TECHNICIAN GRADE - III)


மொத்த பணியிடங்கள் - 18


கல்வித் தகுதி :


இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஓராண்டுகால Medical Laboratory Technology படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-1)


பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆரம்ப கால ஊதியமாக ரூ.13,000 வழங்கப்படும், இரண்டு ஆண்டுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.


இரண்டு ஆண்டு பணிக்கு பிறகு ரூ.19,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.


வயது வரம்பு விவரம் :


இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 


தேர்வு செய்யப்படும் முறை :


 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை :


இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் :


பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.08.2023


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/LT_III_ST_Special_Drive_Detailed_Notification_01082023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


*****


சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரத்தை காணலாம்.


பணி விவரம்


ஊர்க்காவல் படை வீரர்கள்


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • குற்றப் பின்னனி இல்லாதவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

  • ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க  18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.


ஊதிய விவரம்


இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு  சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.


பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


தகுதி உள்ளவர்கள் சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


 சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,


சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,


அண்ணா சாலை,


சைதாப்பேட்டை,


சென்னை-15 


தொடர்பு - 044 2345 2441/ 2442)  


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 31.08.2023