இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சட்டப்பிரிவு  கிளார்க், எம்டிஎஸ்( Clerk, MTS) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

 இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இந்திய ராணுவத்தில் ஏதேனும் பிரிவில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக அவ்வப்போது ராணுவ பணிக்கான அறிவிப்பு வெளியாகும். அதன் ஒரு பகுதியாக தற்போது சட்டப்பிரிவு கிளார்க், எம்.டி.எஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருந்தால் போதும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவப்பணிக்கானத் தகுதிகள்:

பணி : சட்டப்பிரிவு கிளார்க்

கல்வித்தகுதி:

விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

கணினியில் ஆங்கிலம் ஒரு நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சு ஒரு நிமிடத்திற்குள் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.

கணினியில் MS office யைக் கையாள்வதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினருக்கு 45 வயது வரையிலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து வயது மாறுபடும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

7 வது ஊதியக்குழு பரிந்துரையின் படி மாதம் ரூபாய் 19,900 முதல் 63, 200 என நிர்ணயம்.

Multi Task staff (MTS) பணிக்கானத் தகுதிகள்:

இந்திய ராணுவத்தில் எம்டிஎஸ் பணிக்கு சேரும் நபர்கள், சுத்தம் செய்தல், பணியிடங்களை துடைத்தல், அலுவலக வளாகம் மற்றும் அலுவலக உபகரணங்களைப்ப பராமரித்தல் மற்றும் கோப்புகளைக் கொண்டு செல்லுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 45 வயது வரையிலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து வயது மாறுபடும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பளம் :

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் முதல் 56,700 என நிர்ணயம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில், https://cdm.ap.nic.in/ என்ற இணைதளப்பக்கத்திற்கு  செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில், “vavancy In post of LDC & MTS” என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உள்ள PDF யை  ஓபன் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆவணத்தை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

College of Defence Management,

Sainikpuri Post,

Secunderabad,

Telangana,

India-500094

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் இரு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பணி மற்றும் கல்வித்தகுதிக்கு ஏற்ப எழுத்துத்தேர்வு மற்றும் திறனாய்வு மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://cdm.ap.nic.in/images/advertise_for_posts.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.