TCS சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10,000 புதியவர்களை பணியமர்த்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் சமீபத்திய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் கணிசமான அளவிலான எண்ணிக்கையில் புதியவர்களை பணியமர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி நிறுவனங்கள்:
ஐ.டி துறையில் மந்தமான சூழ்நிலை நிலவக்கூடும் என்றும், இதன் காரணமாக தேவை குறைந்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஐடி துறையில் புதிய பணியாட்களை வேலைக்கு எடுப்பது குறைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களும் சமீபத்தில் பணியாட்களை வேலையை விட்டு நீக்கியது.
மேலும், சில நிறுவனங்கள் பணியாட்களை எடுத்தும், இன்னும் பணிக்கு அழைக்காமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உள்ள முதன்மையான ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ், சமீபத்தில் 10, 000 பணியாட்களை எடுத்துள்ளது. வேலை நீக்கம் உள்ளிட்ட எதிர்மறை சூழ்நிலை நிகழ்ந்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்களில் இருந்து புதிதாக பணியமர்த்தப்படுவதைக் கண்ட கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
புதிய பணியமர்த்தல்:
இந்நிலையில் கடந்த மாதம், டிசிஎஸ் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம், தேசிய தகுதித் தேர்வு (NQT) மூலம் புதிய பணியமர்த்தலைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. NQT-யானது அறிவாற்றல் திறன் மற்றும் திறன் நிபுணத்துவத்தை அளவிடுவதற்கு TCS iON வடிவமைத்த மதிப்பீட்டு தளமாகும். TCS மற்றும் Titan போன்ற டாடா குழும நிறுவனங்களைத் தவிர, இதர சில நிறுவனங்கள் பணியமர்த்துவதற்கான NQT ஐப் பயன்படுத்துகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
முதல் கட்ட ஆட்சேர்ப்பு "முன்னுரிமை கல்லூரிகளுக்கு", இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றவர்களுக்கு நடைபெறும். இதுகுறித்து கல்லூரிகள் தரப்பில் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும், எனவே அனைத்து கல்லூரிகளிலும் உள்ள நல்ல மாணவர்கள் கண்டிப்பாக டிசிஎஸ் உடன் பணிபுரிவார்கள் என்று நான் நினைக்கிறேன், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-செப்டம்பரில் பணியமர்த்தல் செயல்முறைகளை நடத்தும் டிசிஎஸ், இந்த ஆண்டு ஆட்சேர்ப்பில் தாமதம் காரணமாக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் எதிர்கொள்கிறது என்று வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
TCS நிறுவனமானது, குறியீட்டில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், வணிகச் சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும் பணியாட்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.