பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்து மேலாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்,வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பணி விவரம்

பொது மேலாளர் (DY GENERAL MANAGER – E-VI GRADE )

பணி இடம்:

பெல் நிறுவனத்தின் ஐதராபாத்தில் உள்ள Naval Systems SBU அலுவலகத்தில் இதற்கு தெரிவு செய்யப்படுபவர் பணியமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (Naval Systems SBU) கேப்டன், கமாண்டர் பணி வகித்தவராக இருக்க வேண்டும். 

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.80,000 - 3% - 2,20,000 வழங்கப்படுகிறது. 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் அழைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://bel-india.in/wp-content/uploads/2024/03/02-APPLICATION-FORM_DGM.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும். ‘’DY GENERAL MANAGER’’ என்று குறிப்பிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி 

Senior Deputy GeneralManager (HR), Bharat Electronics Ltd., I.E.Hyderabad,

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.04.2024

https://bel-india.in/wp-content/uploads/2024/03/01-DETAILED-WEBSITE-ADVT-ENGLISH_DGM.pdf  -என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை காணலாம். 


மேலும் வாசிக்க. 

கோயிலில் வேலை! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

CVRDE Apprenticeship:டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா?கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

Job Alert:10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் பணி செய்ய வாய்ப்பு! முழு விவரம்!