பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.


பணி விவரம்


ஜூனியர் உதவி மேலாளர் (Grade O)




கல்வித் தகுதி பிற விவரம்



  • IDBI வங்கியும் Manipal Global Education Services Private Limited (MGES),
    Bengaluru and Nitte Education International Pvt. Ltd (NEIPL) ஆகியவையும் இணைந்து நடத்தும் ஒராண்டு கால PGDBF (Post Graduate Diploma in Banking and Finance (PGDBF)) டிப்ளமோ பயிற்சியை அளிக்க உள்ளது. 

  • 6 மாத கால டிப்ளமோ பயிற்சி வங்கி அறிவிக்கும் பெங்களூரு & நைட்டி கல்வி நிறுவனத்தின் (Bengaluru and Nitte Education International Pvt. Ltd ) வளாகத்தில் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சியில் பங்கேற்ற வேண்டும்.

  • IDBI வங்கியில் பிறகு இரண்டு மாத கால ’Internship', 4 மாத கால வேலைப் பயிற்சி On Job Training (OJT) ஆகியவைகள் முடிந்த பிறகு வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணியில் அமர்த்தப்படுவர். 

  • நொய்டா நகரில் உள்ள அலுலகங்கள் தவிர்த்து கிளை அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தப்படுவர்.

  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்


பொதுப்பிரிவினர் ரூ.1000 கட்டணமாகவும் பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.idbibank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி -12-ம் தேதியில் இருந்து அதிராகப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் டிஸ்ப்ளே ஆகும்.


ஊக்கத்தொகை மற்றும் ஊதிய விவரம்


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் 6 மாதம் ரூ.5,000/- வழங்கப்படும். Internship காலத்தில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.


ஜூனியர் உதவி மேலாளர் பணிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வழங்கப்படும். மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.


தெரிவு செய்யப்படும் முறை:


ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிக்கப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.


PGDBF பயிற்சி கட்டணம்


இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.3,00,000 செலுத்த வேண்டும்.


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.02.2024


தகுதித் தேர்வு நடைபெறும் நாள் - 17.03.2024