தமிழக  மீன்வளத்துறையில்  பிட்டர் மற்றும் நெட்மென்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் தமிழக மீன்வளத்துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற மீனவப்பிரச்சனைகளை சரிசெய்து வருவதில் இந்த துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் தற்போது மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ், சென்னை ராயப்புரத்தில் செயல்பட்டுவரும் சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்  அலுவலகத்தில் நெட்மென்டர் அதாவது வலை பழுதுபார்ப்பவர் மற்றும் பிட்டர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.  எனவே இப்பணியிடங்களுக்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்…





மீன்வளத்துறையில் ஃபிட்டர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சீட் மெட்டல் ஒர்க் ஃபிட்டர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்


வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


நெட்மென்டர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 3


கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி மற்றும் மீன் பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் அதனை சரிசெய்வது குறித்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.


வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட இரண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ள நபர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணப்பத்தை தயார் செய்ய வேண்டும்.


பதவியின் பெயர்


விண்ணப்பதாரரின்  முழுபெயர் ( பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்)


தந்தை பெயர்


 பிறந்த தேதி


தேசிய இனம்


தகவல் முகவரி


 நிரந்தர முகவரி இன வகை ( SC/ST/OBC/GN/Oh அல்லது வேறு பிரிவினர்்)


கல்வித்தகுதி போன்றவற்றைக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் 30 நாள்களுக்குள் அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் எஸ்.எஸ்.எஸ் எல்சி அல்லது மெட்ரிக்குலேசன் பள்ளி சான்றிதழ், பணி முன் அனுபவ  சான்றிதழ், தகுதி வாய்ந்த அதிகாரம் உள்ளவர்களால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


மண்டல இயக்குநர்,


சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்,


மீன்பிடித்துறை முக வளாகம்,


இராயபுரம்,


சென்னை -600013.


தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதார்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பின் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது.