மத்திய அரசின் தொழில்பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டம் (National Apprenticeship promotion scheme) என்பது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அப்ரண்டிஸாகப் பணிக்கு சேரும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக NAPS மூலம் போக்குவரத்து, மின்வாரியம் என பல்வேறு துறைகளில் அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மின்வாரிய துறையில் பயிற்சிப்பெறுவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய துறையில் அப்ரன்டிஸ் ஆவதற்கான தகுதிகள்:
கல்வித்தகுதி - இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் படி பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இதோடு இப்பணிகளில் சேர்வதற்கு எந்தவிதமான பணி முன் அனுபவமும் தேவையில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு- உச்சபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
காலிப்பணியிடங்கள் – 5
விண்ணப்பிக்கும் முறை:
எனவே மேற்கண்ட தகுதியுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6167ca401cc9256f3a356fd9 என்ற இணையப்பக்கத்திற்கு சென்று கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 16 முதல் 23 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடிப்படை தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு திருவாரூர் மாவட்டம் துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம் – மின்வாரியத்துறையில் பணிபுரிய தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 7 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூபாய் 8 ஆயிரத்து 50 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மின்வாரிய துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆறு நாள் வேலைநாள்களாக இருக்கும் எனவும், மத்திய அரசின் தொழில் பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்…