தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


பணி விவரம்:


அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுநர் -1


அலுவலக உதவியாளர் - 4


கல்வித் தகுதி:



  • அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.

  • இலகுரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

  • சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21-வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுநர் - ரூ.15,700 -50,000/-


அலுவலக உதவியாளர் - ரூ.15,700 -50,000/-


தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை:


http://www.tnerc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:


 The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission,
 4th Floor, SIDCO Corporate Office Building, 
Thiru.vi.ka. Industrial Estate, 
Guindy, 
Chennai 600 032.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2024


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070720242156Eng.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


கூடுதல் தகவலைப் பெற: http://www.tnerc.gov.in/