தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் ஆய்வக நிபுணர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக வேளாண் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் கடந்த 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்: 3


The Dean, Agricultural College and Research Institute, Killikulam – 1


The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore – 1


The Director, (Extension Education), TNAU, Coimbatore – 1


கல்வித்தகுதி : முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,


M.Sc. (Agri.) in (Agricultural Microbiology / Biotechnology/ Soil Science & Agricultural Chemistry / Environmental Science / Crop Physiology/ Agronomy/ Breeding/ Pathology/ Entomology படித்து முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் :  மாதம் ரூபாய் 31,000 என நிர்ணயம்.


தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : 3


The Director (Seed Centre, TNAU, Coimbatore – 1


The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore – 2)


கல்வித் தகுதி : Diploma in Agri. / Horticulture படித்து முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூபாய் 18,000 என நிர்ணயம்.


ஆய்வக நுட்புனர் (Lab Analyst) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்: 1


 The Director Centre for Plant Breeding and Genetics TNAU, Coimbatore


கல்வித் தகுதி : PG Degree in Biological Sciences படித்து முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூபாய் 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், விண்ணப்பத்தாரர்கள் தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட அந்தெந்த துறை முதல்வர்களுக்கு அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


முதுநிலை ஆராய்ச்சியாளர்:


The Dean, Agricultural College and Research Institute, Killikulam (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore (or)The Director, (Extension Education), TNAU, Coimbatore


தொழில்நுட்ப உதவியாளர்:


The Director (Seed Centre), TNAU, Coimbatore (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore


ஆய்வக நுட்புனர்:


The Director (Centre for Plant Breeding and Genetics) TNAU, Coimbatore.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 7, 8, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்..