தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Tamil Nadu Veterinary and animal Sciences university ) கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Post Graduate Research Institute in Animal Sciences (PGRIAS), Kattupakkam) ’Establishment of conservation centre for Nattukuttai cattle’ என்ற திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
பண்ணை மேலாளர்
பணியிடம் : காட்டுப்பாக்கம்
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கால்நடை அறிவியல் / விவசாயம் / ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் / Life Science பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு வயது வரம்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள்https://tanuvas.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Post Graduate Research Institute in Animal Sciences,
Kattupakkam,
Chengalpattu District – 603 203.
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.01.2023 காலை 10.30 மணி
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1673455032.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
திருச்சி : சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு