தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டி என்றாலே அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட சில இடங்கள் தான் பொதுவாக மக்களுக்கு தெரியும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடம் தான் சூரியூர் ஆகும். இங்கு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அந்த சூழ்நிலையில் அப்பகுதி முழுவதும் விழாகோலாமாக காட்சியளிக்கும். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டியை முன்னிட்டு திருவெறும்பூர் அடுத்துள்ளது சூரியூர். இங்கு ஆண்டுதோறும் நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி மாட்டுப்பொங்கல் இன்று 16-ந்தேதி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.




திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்திபெற்றது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்கூடியே பணிகள் முடிக்கபட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் மாடுபிடி வீரர்களுக்கு கோரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கபட்டது. அதன் பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  முன்னிலையில்  மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு,  ஜல்லிக்கட்டு போட்டியை  கொடியசைத்து துவக்கி வைத்தார்.




இதனை தொடர்ந்து காலை 8 மணி அளவில் வாடிவாசல் திறக்கபட்டு காளைகள் சீறிபாய்ந்தது. இந்த ஜல்லிகட்டு போட்டியில்  திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள்  கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர்  மற்றும் நான்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக  பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜல்லிக்ட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் காலை முதலே பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், சீரிபாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் களத்தில் போராடாடி வருகிறார்கள். ஒரு சில காளைகள் களத்தில் வீரர்களுக்கு தண்ணீர் காமித்து சீரிபாய்ந்தது. ஜல்லிகட்டு போட்டியை காண்பதற்கு திருச்சி , தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் பார்த்து வருகிறார்கள். மேலும் போட்டியில் அதிமுக முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் தற்போது 6 சுற்றுகள் முடிந்துள்ளது. 401 காளைகள் பங்கேற்றது, இதில் 6 காளைகள் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளது. குறிப்பாக இதுவரை 49 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். களத்தில் சீரிபாய்ந்த காளைகள் களத்தை விட்டு  வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக புதுக்கோட்டை மாவட்டம், கண்ணகோன்ப்பட்டி, களமாவூர் பகுதியை சேர்ந்த பார்வையாளர் அரவிந்த் ( வயது 25 ) மீது காளை முட்டியதால் வலது கையில் காயம், மற்றும் மார்பகத்தில் மாட்டின் கொம்பு குத்தியதால் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டது, ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர்ழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.