தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது.  இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற வழிவகை செய்யும் நோக்கில் இதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவரங்களை கீழே காணலாம். 

வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்: 

  • தருமபுரி
  • அரியலூர்
  • விருதுநகர்
  • ஈரோடு
  • கரூர்
மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்  வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்
தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 21.01.2023
அரியலூர் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயங்கொண்டம், அரியலூர்  28.01.2023
விருதுநகர் சைவ பானு சத்ரியா கல்லூரி, அருப்புக்கோட்டை , விருதுநகர் மாவட்டம்  28.01.2023
கரூர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கரூர்தாந்தோணிமலை, கரூர் - 639005.  22.01.2023
ஈரோடு  நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு,ஈரோடு மாவட்டம்  22..01.2023

 

ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளர். வேலைத் தேடுபவர்கள் இதை பயன்படுத்திகொள்ளுமாறு அரசு சார்பில் கேட்டுகொள்ள்ப்பட்டுள்ளது.

யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்:

இதில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்களை பட்டம் பெற்றவர்கள்,  நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் பங்கேற்கலாம். 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in-இல் பதிவு செய்ய வேண்டும். 


மேலும் வாசிக்க..

SHRC Recruitment : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? கூடுதல் விவரங்கள்!

Job Alert : டிகிரி படித்தவர்களா? ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த பணி; முழு விவரம் இதோ!