தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர் பிரிவில் உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (09.10.2023) கடைசி தேதியாகும்.


பணி விவரம்:


மெக்கானிகல் பொறியாளர்


ஆட்டோமொபைல் பொறியாளர் 


பணியிடம்


டி.என்.எஸ்.டி.சி. விழுப்புரம், கோயம்புத்தூர், நாகர்கோயில், எஸ்.இ.டி.எஸ்.- சென்னை, சேலம், எம்.டி.சி.,- சென்னை, டி.என்.எஸ்.டி.சி. தருமபுரி, திருநெல்வேலி 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பொறியியல் அல்லாத பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அறிவியல், வணிகவியல் ஆகிய துறைகளில் இளங்களை பட்டம், பி.பி.ஏ., பி.சி.ஏ,.பி.காம் படித்திருக்க வேண்டும்.


இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2019, 2020, 2021, 2022, 2023 -ல் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


இதற்கு அரசு Apprenticeship விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படும் முறை


இதற்கு தேர்வு பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களில் இருந்து பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேரு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


http://boat-srp.com/tnstc2023/-  அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  http://boat-srp.com/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.10.2023


அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


***


சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்)


Post Graduate Teacher 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் பி.எட். படித்திருக்க வேண்டும். 


அரசு / தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்) - ரூ.20,000/-


Post Graduate Teacher - ரூ.25,000/-


விண்ணப்பிபது எப்படி?


இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் நாள் - 10.10.2023


நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 2 மணி முதல்.


காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


நேர்காணல் நடைபெறும் முகவரி


New Conference Hall,
Ground Floor, 
Centenary Building,
Chennai Port Authority