தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY) செயல்படும் விடுதியில் நிர்வாக கண்காணிப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பணி விவரம்:


Men' s hostel Residential Supervisor 


Women's Hotel Residential Supervisor 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் (இளங்கலை பட்டம் பெற்றவர் என்றால்) குறைந்தது 45% பெற்றிருக்க வேண்டும். 


கம்யூட்டர் பயன்படுத்த வேண்டும்.


ஊக்கத்தொகை


இதற்கு மாதம் ரூ.20,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 


இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை  “Application for the post of Hostel Residential Supervisor _____________________________” என குறிபிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2023 மாலை 5 மணி வரை


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு.. https://www.tnpesu.org/upload/Hostel_Residential_Supervisor-Men's_Women's.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் .


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY


Vandalur-Kelambakkam Road,


Melakottaiyur Post,


Chennai – 600 127. Tamil Nadu


தொடர்புக்கு


தொடர்பு எண் :044-27477906


இ-மெயில் முகவரி -regtnpesu@gmail.com


rec.sec.tnpesu@gmail.com


 


*******


 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC)  1,876பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.


பணி விவரம்:


எல்லை பாதுகாப்பு படை,மத்திய தொழில் பாதுகாப்பு படை,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை , இந்தோ - திபெத் எல்லை போலீஸ் ,  சாஸ்த்ரா சீமா பால்,  டெல்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Sub-Inspector (Exe.) in Delhi Police-Male -109


Sub-Inspector (Exe.) in Delhi Police-Female -53


Sub-Inspector (GD) in CAPFs -1714


மொத்த பணியிடங்கள் - 1876


ஊதியம்:


ரூ.35, 400 முதல் ரூ.1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 


கல்வித் தகுதி:


 இளநிலைப் படிப்பில் எதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுவரம்பு:


 01.08.2023 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை உள்ளது. முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு செய்யப்படும் முறை:


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.  உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு மையம்:


சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்,  ஆகிய மாவட்ட மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.  பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது:


www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2023