தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank Ltd) உள்ள காலிப் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி:


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக  மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டுவருகிறது.


தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 


பணி விவரம்:


பொதுமேலாளர் ஐ.டி.


தகுதிகள் என்னென்ன?



  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ. படித்திருக்க வேண்டும். 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட பிரிவில்  தலைமை பொறுப்பில் ப்தினைந்து ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

  • சீனியர் நிர்வாக மேலாளர் பொறுப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 45 வயதுள்ளவராகவும் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத ஊதியமாக Scale VII Cadre -ன்படி வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


இதற்கு விண்ணப்ப கட்டணம் செ0லுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை:



  • ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்-https://www.tmbnet.in/tmb_careers/  -என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

  • விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_GIT20242501.pdf- என்ற இணைப்பைக் க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.05.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_GIT20242501.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.