Anganwadi Job: அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிட விவரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.


7,783 காலிப்பணியிடங்கள்:


அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ”சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட / ஒருங்கிணைந்த தகுதி அளவுகோல்கள் 7,783 அங்கன்வாடி பணியாளர் / மினி அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காலிப்பணியிட விவரங்கள்:


அரசாணயின்படி, அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் நிரப்பப்பட உள்ளன. அதாவது எழுத்துத் தேர்வு ஏதுமின்றி, விண்ணப்பதாரர்களிடம் மாவட்ட வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3886 அங்கன்வாடி பணியாளர், 305 மினி அங்கன்வாடி பணியாளர், 3592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?


அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறந்தபட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பது, அதற்கான கட்டணம் தொடர்பான விவரங்களை அறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவினை அணுகலாம்.


பொதுமக்கள் கோரிக்கை:


நேரடி நியமனங்களின் போது முறைகேடுகள் அதிகம் நிகழ்வதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அதாவது ஆளும் தரப்பினர் பணம் பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்புகளை ஒதுக்கித்தருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் இல்லாமல் தகுதி வாய்ந்த, உண்மையிலேயே பொருளாதார ரீதியிலாக நலிவடைந்தோருக்கு அங்கான்வாடி மைய பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.