இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank Limited (IPPB))-யில் உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Executive - 51


தமிழ்நாடு, பிஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசகம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் , உத்தரகாண்ட் , கேரளா, புதுச்சேரி ஆகிய மண்டலங்களில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் தேர்ந்தெடுப்பவர்கள் பணியமர்த்தப்படுவர். 


கல்வித் தகுதி:



  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • எம்.பி.ஏ. Sales / Marketing  துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். 

  • பணி அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி காலம் விவரம்:


இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி; பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 






வயது வரம்பு விவரம்:


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.



தெரிவு செய்யப்படும் முறை:


இளங்கலை படிப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவர். 


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000/-வழங்கப்படும். வரிப் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.750/- யும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் / PWD ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு https://www.ippbonline.com/documents/20133/133019/1740735228338.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 


https://ibpsonline.ibps.in/ippbcbejan25/basic_details.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.03.2025 இரவு 11.59 மணி வரை 


https://www.ippbonline.com/web/ippb/current-openingsஎன்ற இணைப்பை க்ளிக் செய்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank Limited (IPPB))-யில் உள்ள வேலைவாய்ப்புகள் விவரங்களை தெரிந்து கொள்லலாம்.