தமிழ்நாடு காவல் துறையில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 துணை காவல் ஆய்வாளர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு  வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


விருப்பம் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், , தேர்வு எழுதுவதற்கான தகுதி, தேர்வு செய்யும் முறை, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட தகவல் குறித்து கூடுதல் விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தமிழ்நாடு காவல் துறையில் இணைய விரும்புபவர்கள் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல்  7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


சந்தேகங்கள் குறித்து தெளிவு பெற, 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 978903725 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணிகளுக்களில் சேர தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர் எழுத்துத்தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  அப்போதுதான் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிய முடியும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்.  இதில் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்கள். தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என தெரிவிகப்பட்டிருக்கிறது.


இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.


பலருக்கும் தமிழக காவல் துறை பணியில் சேர வேண்டும் என்பது மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்றாகும். பெரும்பாலன இளைஞர்களும் போலீஸ் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு காவல் துறையில் சேருவதற்கு தேவையான பாடத்திட்டங்களை நன்றாக படித்து தேர்ச்சி அடைய வாழ்த்துகள்.  ஆல் தி பெஸ்ட்!


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண