பழனி முருகன் கோவில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலில் செயல்பட்டுவரும் சித்தமருத்துமனையில் சித்த மருத்துவர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயலபட்டுவரும் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் ஆகிய பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்து சமய அறநிலையத்துறைப்பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 19
சித்த மருத்துவர் – 3
கல்வித்தகுதி:
தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம்.
செவிலியர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் - 5
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.