தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.


பணி விவரம் 


Research Analyst


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க Ph.D. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Fisheries Science / Life Science 2 துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


Research Analyst - ரூ.35,000/-


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை அறிய


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்


State Referral Laboratory for Aquatic Animal Health, 
TNJFU - Madhavaram Campus, 
MMC, Chennai - 600051


தொடர்புக்கு - 044 -25556750


இ-மெயில் ஐ.டி. - uma@tnfu.ac.in.


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 03.05.2024 காலை10 மணி முதல் நடைபெறும்