மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூனியர் உதவியாளர், ஸ்டாஃப் நர்ஸ், எலக்ட்ரிசியன் / பளம்பர், சமையலக உதவியாளர், பல்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு வரும் மே 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
- ஸ்டாஃப் நர்ஸ் (பெண்)
- உதவியாளர்
- ஆடிட் உதவியாளர்
- ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி
- சட்ட உதவியாளர்
- ஸ்டெனோகிராஃபர்
- கம்யூட்டர் ஆப்ரேட்டர்
- கேட்டரிங் கண்காணிப்பாளர்
- ஜூனியர் உதவி செயலாளர் (Hqrs / RO Cadre)
- ஜூனியர் உதவி செயலாளர் (JNV Cadre)
- எலக்ட்ரிசியன் ப்ளம்பர்
- ஆய்வக உதவியாளர்
- சமையலக உதவியாளர்
- பன்முக உதவியாளர்
மொத்த பணியிடங்கள் - 1,377
கல்வித் தகுதி
- நர்ஸ் பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆடிட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.காம். படித்திருக்க வேண்டும்.
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி, ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- ஸ்டாஃப் நர்ஸ் (பெண்) - ரூ.44,900-1,42,400/-
- உதவியாளர் - ரூ.35,400-1,12,400/-
- ஆடிட் உதவியாளர் -ரூ.35,400-1,12,400/-
- ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி - ரூ.35,400-1,12,400/-
- சட்ட உதவியாளர் - ரூ.35,400-1,12,400/-
- ஸ்டெனோகிராஃபர் -ரூ.25,500-81,100/-
- கம்யூட்டர் ஆப்ரேட்டர் -ரூ.25,500-81,100/-
- கேட்டரிங் கண்காணிப்பாளர் -ரூ.25,500-81,100/-
- ஜூனியர் உதவி செயலாளர் (Hqrs / RO Cadre) - ரூ.19,900-63,200/-
- ஜூனியர் உதவி செயலாளர் (JNV Cadre) -ரூ.19,900-63,200/-
- எலக்ட்ரிசியன் ப்ளம்பர் -ரூ.19,900-63,200/-
- ஆய்வக உதவியாளர் - ரூ.18,000-59,600/-
- சமையலக உதவியாளர் - ரூ.18,000-59,600/-
- பன்முக உதவியாளர் - ரூ.18,000-59,600/-
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு https://navodaya.gov.in/nvs/en/Home1 - - என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பணிக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் தகவல் குறித்த விவரங்களை https://drive.google.com/file/d/13Bmx_j0hDt6WgwG1mPG1ei9tQ5LnxtFc/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணபிக்க கடைசி நாள் - 07.05.2024