தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அலுலக உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.
பணி விவரம் :
- ஸ்டெனோகிராபர்
- டைப்பிஸ்ட்
- அலுவலக உதவியாளர்
- இரவுக் காவலர்
மொத்த பணியிடங்கள் - 10
கல்வித் தகுதி:
- ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
- டைப்பிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் சான்றிதழ் இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- ஸ்டெனோகிராபர் : ரூ. 20,600 – 65,000
- டைப்பிஸ்ட் - ரூ. 19,500 – 62,000
- அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 – 50,000
- இரவுக் காவலர் - ரூ. 15,700 – 50,000
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://shrc.tn.gov.in/doc/recruitment_030123.pdf - என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ப்ரிண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு, தேவையான ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அஞ்சல் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி :
செயலாளர்,
மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு,
எண்.143, பி.எஸ்.குமாரசாமி சாலை, (கிரீன்வேஸ் சாலை) –
சென்னை – 600028.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2023
கூடுதல் விவரங்களுக்கு - https://nhrc.nic.in/statecommission/tamil-nadu-state-human-rights-commission
தொடர்பு எண் - 044-24951484
மேலும் வாசிக்க..
JEE Main 2023: ஒரு வாரத்தில் ஜேஇஇ மெயின் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?