தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் என்று காணலாம். இதற்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வரை கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




பணி விவரம்



  • உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -194

  • உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145

  • உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80

  • உதவிப்பொறியாளர் (சிவில்) -58

  • உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14

  • உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71

  • உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156

  • நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12

  • இளநிலை பொறியாளர் - 24

  • தொழில்நுட்ப உதவியாளர் - 257

  • வரைவாளர் (மாநகராட்சி) -46

  • வரைவாளர் (நகராட்சி) -130

  • பணி மேற்பார்வையாளர் -92

  • நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102

  • பணி ஆய்வாளர் - 367

  • துப்புரவு ஆய்வாளர் -356


மொத்த பணியிடங்கள் - 2104


ஊதிய விவரம்






தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை


http://www.tnmaws.ucanapply.com/ - என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும். 


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




முக்கிய நாட்கள்




விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024


விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.


இராணுவத்தில் வேலை


அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிகளில் சேர மார்ச்22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2024-25 ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான தகுதித் தேர்வு  (AGNIVEER GENERAL DUTY (WOMEN MILITARY POLICE)) நடைபெறவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு திருமணமாகாத பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்: 


அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி 


கல்வித் தகுதி: 



  • அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு. 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 


வயது வரம்பு: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 17 -1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Computer Based Written Examination (Online CEE))
மற்றும் ஆட்சேர்ப்பு முகாம் (Recruitment Rally) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற் தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவைகளுடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


தேர்வு கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் போர்ட்டல் மாற்றும் யூ.பி.ஐ. (UPI) மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பது குறித்து முழு விவரம் -மேலும் வாசிக்க..