தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 501 போஸ்ட்மேன் மற்றும் அஞ்சல் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தபால் அனுப்புவது தொடங்கி மணி ஆர்டர் அனுப்புவது மற்றும் போஸ்ட்மேன்கள் மூலமாக குறைந்த அளவிலான பணத்தை நம்முடைய ஏடிஎம் கார்டு மூலம் வீட்டிலேயே எடுத்துக்கொள்வது போன்ற பல வழிகளில் மக்களுக்கு சேவையாற்றிவருகிறது இந்திய தபால் துறை. மத்திய அரசு பணியான இதில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவிதமாக தான் தற்போது தமிழக அஞ்சல் துறையில் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 488 போஸ்ட்மேன் மற்றும் 13 தபால் அலுவலர் என மொத்தம் 501 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்?, தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தமிழக அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் மற்றும் தபால் காவலர் பணிக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி:
மத்திய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்டப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இதோடு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் பணிபுரிவதற்கான போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதி : தபால் காரர் அதாவது போஸ்ட்மேன் மற்றும் தபால் காவலர் பணிக்கு சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2021 ன் படி அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Sc/st பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வத்துடனும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் அலுவலகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் அதைப் பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மண்டல அலுவலகங்களுக்கு வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது விண்ணப்பங்களுடன் இரண்டு பாஸ்போர்ட் செஸ் புகைப்படங்களை இணைக்க வேண்டும். பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை கோட்ட அலுவலகம் மூலம் அனுப்பும் போது, புகைப்படத்தின் ஒரு நகலை விண்ணப்பத்துடன் ஒட்டி, முறையான சான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதிக்குப்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்திற்கும் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு (paper1 & paper 2) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும், முதல் தாள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரைக்கும், இரண்டாம் தாள் காலை 11.45 மணி முதல் 12.45 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தேர்வானது சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.