நாட்டின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் , கொதிகலன் செயல்பாடு, திட்டங்கள் மற்றும் ஆட்டோமேஷன் துறைக்கு மேலாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி விவரம்:


Manager (Boiler Operation) (E-3) - 09
Manager (Projects) (E-3) - 04
Manager (Automation) (E-3) - 04


கல்வித் தகுதி:


பாய்லர் ஆப்ரேசன் துறையின் மேலாளர் பணிக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பவர் பிளான்ட், உற்பத்தி, இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில கொதிகலன் வாரியத்தால் வழங்கப்பட்ட கொதிகலன் செயல்பாட்டு பொறியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 


 அனல் மின் நிலையத்தில் கொதிகலன் மற்றும் விசையாழின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


ப்ராஜெட் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம்: பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், பொதுத்துறையால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் திட்ட மேலாண்மை, செயல்பாடு(உள்கட்டமைப்பு திட்டம்) போன்றவற்றில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கட்டுமான நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் திட்ட நிர்வாகத்தில் சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


ஆட்டோமேசன் துறை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கண்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்சடேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


 பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


Manager (Boiler Operation) (E-3) – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Manager (Projects) (E-3) - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Manager (Automation) (E-3) -  37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்


ஊதிய விவரம்:


பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.80,000  முதல் ரூ. 2,20,000 வரை ஊதியம் வழங்கப்படும்.


 தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிவயற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர்,  ஓ.பி.சி.,  EWS2 பிரிவினர் ரூ.700,-யும் பழங்குடியின/பட்டியலின பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


www.sail.co.in அல்லது www.sailcareers.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 


அந்த விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து,  அதனுடன் தேவையான கல்வி மற்றும் பணி அனுபவ சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


 விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.12.2022


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN),


BLOCK “E”, GROUND FLOOR,


ADMINISTRATION BUILDING,


ROURKELA STEEL PLANT,


ROURKELA – 769 011 (ODISHA)


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADVT%20NO.%2003_2022.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.