SSC JHT Recruitment 2024: இந்தி மொழியில் பட்டம் பெற்றவரா?மத்திய அரசுப் பணி- விண்ணப்பிக்க நாளையே கடைசி!

SSC JHT Recruitment 2024: Sமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

Continues below advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்ட 312 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (26.08.2024) கடைசி. 

Continues below advertisement

பணி விவரம்:

  • ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி
  • ஜூனியர் இந்திய மொழிபெயர்ப்பாளர் 
  • சீனியர் இந்திய மொழிபெயர்ப்பாளர் 

Central Secretariat Official Language Service (CSOLS), Armed Forces Headquarters (AFHQ), மத்திய அரசு துறைகள், அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டற்றில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இது. 

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், இந்தி ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணியில் அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • சீனியர் மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், இந்தி ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, மூன்று ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணியில் அனுபவத்துடன்  டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க18  வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம் :

  • ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி - Level-6 (ரூ.35400- 112400) 
  • ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - Level-6 (ரூ.35400- 112400)
  • சீனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - Level-7 (ரூ.44900- 142400)

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறிவுத் தேர்வு (மொழிபெயர்ப்பு செய்தல்) ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ -என்ற இணைப்பை க்ளிக் செய்து  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு  ரூ.100,  கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின  பிரிவினர் மற்றும் பெண்கள்,முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CHTE_2024_08_02.pdf -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 26.08.2024 23:00 மணி வரை

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி - 26.08.2024 - 05.09.2024 (23:00 மணி வரை)

கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் - அக்டோபர் - நவம்பர், 2024
 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola