SPMCIL Recruitment:
இந்தியா கவன்மெண்ட் மிண்ட் (India Government Mint) "செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்" (SPMCIL)- இன் கீழ் உள்ள ஒன்பது பிரிவுகளில் ஒரு நிறுவனமாகும். இது மினிரத்னா வகை-I, மத்திய பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும், 1956 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆவணங்கள், நாணயம் மற்றும் வங்கி நோட்டுகள், நீதித்துறை அல்லாத முத்திரை தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் போன்றவற்றை வடிவமைத்தல், தயாரித்தல்/அச்சிடுதல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. MCIL அதன் பதிவு செய்யப்பட்ட நிதி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மற்றும் ஜவஹர் வியாபர் பவனில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஜன்பத், புது தில்லி 110001. இது மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் நான்கு நாணயவியல்/ பாதுகாப்பு பிரிவுகளை கொண்டுள்ளது. நாசிக், தேவாஸ் மற்றும் ஹைதராபாத்தில் நாணய/பாதுகாப்பு அச்சகங்களையும் கொண்டுள்ளது, மேலும் நர்மதாபுரத்தில் உயர்தர காகித உற்பத்தி ஆலையும் உள்ளது.
இந்திய கவன்மெண்ட் மிண்ட் நிறுவனத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆலையில், ஜூனியர் டெக்னீஷியன்கள், ஆய்வக உதவியாளர் மின்நிலைய ஆபரேட்டர், மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
பணி விவரம்:
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician Turner(CNC Operator)) – 03
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician (Machinist)
Milling (1 Post) Grinder (01 Post)) – 02
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician (Furnaceman)) – 01
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician (Welder)) – 01
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician (Mechanical)) – 02
ஜூனியர் டெக்னீசியன் (Jr. Technician (Electronics)) – 01
ஆய்வக உதவியாளர் (Lab Assistant) – 04
Sub-Station Operator – 03
மேற்பார்வையாளர் (Supervisor (Assay)) – 02
கல்வித் தகுதி:
ஜூனியர் டெக்னீசியன் பணிகளுக்கு ஐ.டி.ஐ. படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் படித்திருக்க வேண்டும்.
Supervisor (Assay) பணிக்கு பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு:
Supervisor (Assay) பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பணிகளுக்கு விண்னப்பிக்க 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பிய்வர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
ஊதிய விவரம்:
ஜூனியர் டெக்னீசியன் பணிகளுக்கு மாத ஊதியமாக ரூ.18, 780 முதல் ரூ.67, 390 வரை வழங்கப்படும். (Other allowances as admissible)
Supervisor (Assay) பணிக்கு ரூ. 27,600 முதல் ரூ.95,910 வரை வழங்கப்பட உள்ளது. (Other allowances as admissible)
எப்படி தேர்வு செய்யப்படுவர்?
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைனில் தேவையான கல்வி சான்றிதழ்களை அப்லோடு செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்னப்பிக்க கடைசி தேதி: 29.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க-- https://ibpsonline.ibps.in/igmkolaug22/
அறிவிப்பின் முழு விவரம் அறிய: https://igmkolkata.spmcil.com/interface/JobOpenings.aspx?menue=5