கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஜீப் ஓட்டுநர்
பணியிடம்:
கோயம்புத்தூர்
பணி தொடர்பாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் விவரம்:
கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகின், 31.08.2022 வரை அரசுத் தலைப்பில் காலியாக உள்ள 3 ஜீப் ஒட்டுநர்கள் காவிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கல்வித் தகுதி:
ஜீப் ஒட்டுநர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வோர்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1986)-இன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டூநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொது பிரிவு - 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -34வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) -34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் - 42வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம்:
இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.19,500 முதல் 62,000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்படும் கஎன்: 05.11.2022 முதல் 05.12.2022 மாலை 5.45 மணி வரை
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி. இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4) Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்.303, நிதி (ஊதியக்குழு) துறை நாள்:11.10.2017, அரசாணை எண்.305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணைஎண்.306, விதி (ஊதியக்குழு) துறை எண்:3.10.2017-ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யட்பட்ட விண்ணப்பங்களை 05.12.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிட்டபிரிவு),
கோயம்புத்தூர் - 541 018.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022110462.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
கோவை மாட்ட வேலைவாய்ப்பு செய்திகளைக் காண https://coimbatore.nic.in/