சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையங்களில் மருத்துவராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


மகப்பேறு மருத்துவர் (Obstetrician/ Gynaecologist)  : 12


குழந்தை நல மருத்துவர் ( Paediatrician) - 14


பொதுநல அறுவைச் சிகிச்சை மருத்துவர் (General Surgeon) : 14


மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) : 8


எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic Surgeon): 1


பல்நல மருத்துவர் (Dentist) : 1


மொத்த பணியிடங்கள் - 45


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Obstetrician/ Gynaecologist, Paediatrician , General Surgeon, Anaesthetist, Orthopaedic Surgeon, Dentist ஆகிய துறைகளில் எம்.டி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம் - 



  • மகப்பேறு மருத்துவர் (Obstetrician/ Gynaecologist)  - ரூ.90,000/- 

  • குழந்தை நல மருத்துவர் ( Paediatrician) - 14

  • பொதுநல அறுவைச் சிகிச்சை மருத்துவர் (General Surgeon) - ரூ.90,000/- 

  • மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) - ரூ.90,000/- 

  • எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic Surgeon) - ரூ.90,000/- 

  • பல்நல மருத்துவர் (Dentist) -  ரூ.34,000/- 


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை


https://chennaicorporation.gov.in/gcc/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:


The Member Secretary,
 Chennai City Urban Health Mission, 
Public Health Department, 
Ripon Building, Chennai 600003.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.11.2023 மாலை 5 மணி வரை 


BHEL Recruitment 2023 


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரங்கள்:


 Supervisor Trainee (Mechanical)


 Supervisor Trainee (Civil) 


 Supervisor Trainee (HR) 


பணி இடம்:


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் /  எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்:


இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 


பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.11.2023


உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023


அதிகாரப்பூர்வ இணையத முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.