மதுரை மாவட்டத்தின் சமூக நலன் துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமூக நலன் துறையில் உள்ள பணி விவரங்கள்:


மைய நிர்வாகி


சட்ட வல்லுநர்


மல்டிபர்பஸ் உதவியாளர்


பாதுகாவலர்


கல்வித் தகுதி: 


மைய நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்க  இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண்வதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். பெண்களின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். இந்தப் பணியிடத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


சட்ட வல்லுநர் பணிக்கு  இளங்கலை சமூகப் பணி, உளவியல் அல்லது மேம்பாட்டு நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஷிப்ட்:


காலை - 6 மணி முதல் 2 மணி வரை 


மதியம்- 12 மணி முதல் 8 மணி வரை


இரவு பணி - 8 மணி முதல் 6 மணி வரை 



மல்டிபர்பஸ் உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வீட்டு மற்றும் தோட்ட வேலைகள், சமையல் பணி ஆகியவைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் 24 மணிநேரம் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். இரண்டு ஷ்ப்ட்களில் வேலை செய்ய வேண்டும். உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்


ஷிப்ட்:


காலை  8 மணி முதல் இரவு 8 மணி வரை 


இரவு எட்டு மணி முதல் காலை 8 மணி வரை 


பாதுகாவலர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்


ஷிப்ட்:


காலை  8 மணி முதல் இரவு 8 மணி வரை 


இரவு எட்டு மணி முதல் காலை 8 மணி வரை 


வயது வரம்பு:


வயது வரம்பு குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 


ஊதிய விவரம்: 



  • மைய நிர்வாகி பணி :  ரூ. 30,000

  • சட்ட பணியாளர் : ரூ. 15,000

  • மல்டிபர்பஸ் உதவியாளர் : ரூ. 6,400

  • பாதுகாவலர் பணி:  ரூ. 10,000


எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்: 


மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120766.pdf -என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


District Social Welfare Officer, 
District Social Welfare Office, 


Third Floor, Additional Building of Collectorate, Madurai - 20. 


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2022


கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120770.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.