திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள ஒட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்த அறிவிப்பு பழங்குடியினருக்கான (Scheduled Tribe) குறைவு பணியிடத்தினை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பப்பட உள்ளது. 


பணி விவரங்கள்: 


 ஓட்டுநர்


பணி நியமன வகை : சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive)


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இதர தகுதிகள்:   


மோட்டார் வாகன சட்டம் 1988(மத்திய சட்டம் 59/1988)- ன்படி தமிழக அரசின் தகுந்த அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாஅனி எண்.303, நிதி ஊதியக்குழு துறை நாள் 11.10.2017, அரசாணை எண்.305 நிதி ஊதியக்குழு துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை எண்.306, நிதி ஊதியக்குழு துறை நாண் 13.10.2017-இன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.


வயது வரம்பு:


 1.07.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 42 வயதிற்குள்  இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 55 வயதிற்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 52 வயதிர்க்குள்ளும் இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


விண்ணப்பப் படிவத்தினை www.tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நிபந்தனைகள்: 


இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.


விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று. இருப்பிட சான்று, சாதி சான்று மற்றும் பணி முன் அனுபவ சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


இப்பணியிடம் பழங்குடியினருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை (10 × 4 Inches Postal Cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்களை அனுப்பவ வேண்டிய முகவரி: 


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சிப் பிரிவு), 3-ஆவது தளம்,
திருச்சிராப்பள்ளி - 620 001


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 18.01.2023 - பிற்பகல் 5.45 மணி வரை.


கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121242.pdf-என்ற லிங்கை கிளிக் செய்யவும்.