தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தலைமைச் செயலக  திட்ட மேலாண்மை இயக்க அலகின் உள்ள 'Project Management Unit' வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (10.04.2023)கடைசி.

பணி விவரம்:

  • மூத்த ஆலோசகர் (senior consultant)
  • ஆலோசகர்(Consultant)
  • திட்ட மேலாண்மை உதவியாளர் (Project Management Assistant)
  • Data entry operator

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • மூத்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க பொது நிர்வாகம்,சமூக அறிவியில்,  வணிக மேலாண்மை ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டு கால பணி அனுபவம் இருப்பது சிறந்தது.
  • ஆலோசகர் பணிக்கு பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  • திட்ட மேலாண்மை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொது நிர்வாகம், சமூக அறிவியல்,  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • டேட்டா எண்ட்ரி ஆப்ட்ரேட்டர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

  • மூத்த ஆலோசகர் (senior consultant) -ரூ.1,25,000
  • ஆலோசகர்(Consultant)-75,000
  • திட்ட மேலாண்மை உதவியாளர் (Project Management Assistant) -ரூ.30,000
  • Data entry operator - ரூ.15,000

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின்அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012-  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 10.04.2023 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி;

 The Director, Directorate of Social Welfare,

2nd Floor,

Panagal Maligai,

Saidapet, Chennai-15


மேலும் வாசிக்க.

PM Modi Speech: "வரலாறு, பாரம்பரியத்தின் இருப்பிடம்.. தேசிய, தேசபக்தி உணர்வின் மையம் தமிழ்நாடு" புகழாரம் சூடிய பிரதமர் மோடி..!

PM Modi: தமிழ்நாட்டில் 5,200 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டங்கள்...நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..! என்னென்ன திட்டங்கள்?