தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ், பல் மருத்துவமனைகள், சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர் -12


விற்பனையாளர்-22


மேற்பார்வையாளர் -14


மொத்த பணியிடங்கள் - 48 


கல்வித் தகுதி



  • அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 10-வது,12-வது அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விற்பனையாளர் 12-வது / ஐ.டி.ஐ./ டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • பட்டம் / டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்வில் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


அலுவலக உதவியாளர் -ரூ.5,200 - ரூ.20,200


விற்பனையாளர்-ரூ.6,200 -ரூ.26,200


மேற்பார்வையாளர் -ரூ.6,200 - ரூ.28,200


பயிற்சி காலத்திற்கு ஒரு ஆண்டு தொகுப்பூதியமாக வழங்கப்படும்.


அலுவலக உதவியாளார் - ரூ.8,000/-


மேற்பார்வையாளர் - ரூ.10,000/-


தேர்வு முறை


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


நன்னடத்தை மற்றும் பயிற்சி 


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஓராண்டு (365 வேலை நாட்கள்) தௌதிகாணல் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.


பயிற்சி


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் பரிந்துரையின் படிபயிற்சி அளிக்கப்படும்.


விண்ணப்ப கட்டணம்


GENERAL/UR/EWS/OBC விண்ணப்பதாரர் விண்ணப்ப கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.


பழங்குடியின / பட்டியலின பிரிவினர் ரூ.250/- செலுத்த வேண்டும்.



https://www.simcoagri.com/ - என்ற இணைப்பை க்ளில் செய்து Payment Gateway - லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.


Cash Deposit Challan - பயன்படித்த வங்கி விவரம்


Account Name:SOUTH INDIA MULTISTATE AGRICULTURE COOPERATIVE SOCIETY LIMITED
Account No: 836120110000362
IFSC Number:BKID0008361
Bank Name / Branch: Bank of India / Vellore


விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது இணைக்கப்பட வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது அதற்கு முன் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடியாக / அஞ்சல் மூலம் சமர்பிக்கலாம்.


South India Multi-State Agriculture Co-Operative Society Ltd,
Head Office,
Town Hall Campus,
Near Old Bus Stand,
Vellore - 632004. 


10-ம் வகுப்பு சான்றிதழ், 12-வது வகுப்பு சான்றிதழ், இளநிலை பட்டம் , டிப்ளமோ, முதுகலை பட்டம் சான்றிதழ் உள்ளிட்ட என்னென்ன சான்றிதழ்கள் நகல்களை இணைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக https://www.simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024


விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யhttps://www.simcoagri.com/image/main-slider/home-1/simco-application.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.