இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நிலையை உயர்த்துதல், அதற்கான நிதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முதன்மை வளர்ச்சி நிதி நிறுவனமாக உள்ளது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி. ( small industries development bank of india – SIDBI).இவ்வங்கி கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதோடு  உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை எளிதாக்குவதோடு, இதன் வளர்ச்சியை மேம்படுத்தப்படுகிறது. இவ்வங்கியில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் அவ்வப்போது இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? வயது  வரம்பு? குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.





இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் - 100


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்திய சிறு தொழில்கள் வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில்  https://www.sidbi.in/en/careers/page/79   என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


பின்னர் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தில் இப்பணியிடங்களுக்கான என்னென்ன ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள கேட்கப்பட்டுள்ளதோ அதனை பதிவேற்றம் செய்துக்கொண்டு சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன்  வாயிலாக வருகின்ற மார்ச் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்பிக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் – மார்ச் 24, 2022


ஆன்லைன் தேர்வு – ஏப்ரல் 16, 2022


உத்தேச நேர்முகத்தேர்வு மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.





சம்பள விபரம்:


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 28,150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.sidbi.in/en/careers/page/79 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.