இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் ( ஐ.சி.எம்.ஆர்.-Indian Council of Medical Research ) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை பிரதிநிதி (Deputation) அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


பணி விவரம்: 


அக்கவுண்ட்ஸ் அலுவலர் (Accounts Officer)


அக்கவுண்ட்ஸ் அலுவலர் ஜீனியர் கிரேடு (Accounts officer Junior Grade)


கல்வித் தகுதி : 



  • சம்பந்தப்பட்ட துறையில் கல்வித் தகுதி இருக்க வேண்டும். மத்திய / மாநில அரசு சார்பிலான பணியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். லெவல் - 8 பணிநிலையாக இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • பட்ஜெட், நிதி கையாள்தல் உள்ளிட்டவற்றில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • அக்கவுண்ட்ஸ் ஜூனியர் கிரேட் பணிக்கு உதவியாளர் லெவல் 6 அல்லது 7 -இல் பணிபுரிபவராக இருக்க வேண்டும். 

  • கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


அக்கவுண்ட்ஸ் அலுவலர் (Accounts Officer) - ரூ. 56,100 - ரூ.1,77,500


அக்கவுண்ட்ஸ் அலுவலர் ஜீனியர் கிரேடு (Accounts officer Junior Grade) - ரூ.44,900 - 1,42,400


பணி இடங்கள்: 


இந்திய மருத்து ஆராய்ச்சி மையத்தின் அலுவலகங்களான புது டெல்லி, ஆக்ரா, பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரி, ஜபால்பூர், மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். 


எப்படி விண்ணப்பிப்பது? 


விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்பித்து  https://main.icmr.nic.in- என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023


அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://studycafe.in/wp-content/uploads/2023/01/ICMR-Recruitment-2023.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.




மேலும் வாசிக்க..


சென்னை விமான நிலையத்தில் லட்சக்கணக்கில் தங்கம் பறிமுதல்... வசமாக சிக்கிய 3 பெண்கள்..!


Alanganallur Jallikattu: களைகட்டும் ஜல்லிக்கட்டு... மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த மோதிரங்கள் பரிசளிப்பு..!