சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் அருகே உள்ள சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
- தட்டசர்
- உலர்தாவரக்காப்பாளர்
- அருங்காட்சியக்காப்பாளர்
- அலுவலக உதவியாளர்
- தோட்டக்காரர்
- காவலர் (ஆண்ட்கள் மட்டும்)
- தண்ணீர் கொண்ர்பவர்
- பெருக்குபவர்
- துப்புரவாளர்
- குறியீட்டாளர்
மொத்த பணியிடங்கள்: 15
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு வழங்கப்படும் ஊதிய விவரம் குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் தட்டச்சு படிப்பில் இளநிலை மற்றும் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு தகுதியான படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும்.
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்பிற்கு அரசு விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு முறை கடைப்பிடிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு கிடைக்க பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்லில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:03.05.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர்,
சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி- பள்ளத்தூர்.
மேலும் வாசிக்க.