நாட்டின் பிரபல பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரும் 27-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ப்ரோபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers)
மொத்தப் பணியிடங்கள்- 600
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30.04.2025 -ன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 6-வது செமஸ்டர் தேர்வு எழுதியவர்கள் / எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 30.04.2025-க்குள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். Integrated Dual Degree (IDD) சான்றிதழும் இணைக்க வேண்டும். பொறியியல், மருத்துவம் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Chartered Accountant, Cost Accountant படித்தவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
முதல்நிலை தேர்வு:
முதன்மை தேர்வு:
இறுதித் தேர்வு:
எழுத்துத் தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா?
எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://sbi.co.in/web/careers/current-openings / https://sbi.co.in/web/careers
கவனிக்க :
ஆன்லைன் பதிவு செய்தல்: 27.12.2024 முதல் 16.01. 2025 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
தேர்வுக்கான பயிற்சி : பிப்ரவரி, 2025
முதல்நிலை எழுத்துத் தேர்வு: 08.03.2025 / 15.03.2025
முதன்மை எழுத்துத் தேர்வு : ஏப்ரல் / மே 2025
திறனறிவுத் தேர்வு: 2025 மே/ ஜூன்
நேர்காணல் : 2025 மே / ஜூன்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - மே/ ஜூன் 2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ஊதிய விவரம்:
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது. (ரூ.48,480-2,000/7-62,480-2340/2-67,160-2680/7-85,920)
விண்ணப்பிக்க கடைசி நாள் - 16.01.2025
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://sbi.co.in/web/careers/current-openings - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.