Power Grid Corporation of India Recruitment:


இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்டு பொறியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. எல்க்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன் உள்ளிட்ட துறைகளுக்கான ’Field Engineer ’ பணிகளுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் என்று இந்த கட்டுரையில் காண்போம். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் செயல்பட்டுவரும் பவர்கிரிட் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவர் என்றும் இது ஒப்பந்தம் அடிப்படையிலான வேலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குருகிராமைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தான் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சாரப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.  இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகக்கூடும். இந்நிலையில் தற்போது  வெளியாகியுள்ள 800 ஃபீல்டு பொறியாளர்கள் பணிக்கு  என்னென்ன தகுதிகள் விண்ணப்பதார்கள் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


பணி விவரம்: 


Field Engineer 


மொத்த பணியிடங்கள் - 800


இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் ஃபீல்டு பொறியாளர்கள் பணிக்கான தகுதிகள்:


கல்வித்தகுதி:


பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) என ஏதாவதொரு பிரிவில் முழுநேர டிப்ளமோ அல்லது இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும். இதோடு 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். (B.E., B.Tech, B.sc. (Engg))


வயது வரம்பு:


இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 29 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம் :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூபாய் 30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக  1 லட்சத்து 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் https://www.powergrid.in/ என்ற இணையதளப்பக்கத்தின் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் பெயர், கல்வித்தகுதி, சுய விபரம் போன்றவற்றைப் பூர்த்தி செய்து அனுப்பி வேண்டும். இதோடு மறக்காமல் விண்ணப்படிவத்தில் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் :


Filed Engineer (Electrical, E&T,IT)) பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 400 விண்ணப்பக்கட்டணமாகவும், Filed Engineer (Electrical, E&C)) பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 300 விண்ணப்பக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.


பழங்குடியின/பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.   இதோடு மட்டுமின்றி அவ்வப்போது பவர் கிரிட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். இதனை  https://www.powergrid.in/ என்ற இணையதள முகவரியின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:11.12.2022


விவரத்தின் முழுவிவரம் அறிய https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.