SBIயில் 1226 வட்டம் சார்ந்த அதிகாரிகளைப்பணியிடங்கள் ( Circle based office – CBO) காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு 276 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
நாட்டின் அதிகமான வாடிக்கையாளர்களைக்கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுவருகிறது. நாடு முழுவதும் இவ்வங்கியின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது 6 மாநிலங்களுக்கு வட்டம் சார்ந்த அதிகாரிகள் அதாவது Circle based office – CBO பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை ? என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
Circle based office – CBOக்கான காலிப்பணியிட விபரம்:
அகமதாபாத் குஜராத் – 354
பெங்களுரு கர்நாடகா- 278
போபால் மத்தியப்பிரதேசம் – 162
சத்தீஸ்கர் – 52
சென்னை தமிழ்நாடு – 276
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் - 104
கல்வித்தகுதி:
எஸ்பிஐ வங்கியில் வட்டம் சார்ந்த அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதிப்பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
சிபிஓ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2021 ன் படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதோடு அரசு விதிகளின்படி SC, ST, OBC, போன்ற பிற இடஒதுக்கீடுப் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
எஸ்பிஐ வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/sbircbonov21/basic_details.php என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு ரூ. 750 மற்றும் இதரப்பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி நடத்தும் எழுத்துத் தேர்வு இரண்டு மணிநேரம் நடைபெறும் எனவும் ஆங்கிலம், வங்கியியல், பொது விழிப்புணர்வு/பொருளாதாரம் மற்றும் கணினி திறன் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 120 கேள்விகளைக் கொண்டிருப்பதாக அமையும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும், நேர்காணலுக்கு 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
மேற்கண்ட முறைகளில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. . 36,000 என நிர்ணயம். பணியைப்பொறுத்து ஆண்டு தோறும் சம்பள உயர்வு வழங்கப்படும். எனவே எஸ்பிஐ வங்கியில் பணிபுரிய ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்ககொள்ளுங்கள்.